இந்தியாவுக்குப் புதிய ஆபத்து..! இந்தியாவை மட்டுமே உளவு பார்க்க 6 அதிநவீன செயற்கைக்கோள்கள்… பாகிஸ்தான் செஞ்ச வேலை… பெரும் பரபரப்பு..!!

Spread the love

இந்தியாவை எந்நேரமும் உளவு பார்த்துக் கண்காணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் நாடு 6 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான், கடந்த 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையிலான குறுகிய காலத்திற்குள் இந்த 6 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களையும் ஏவி முடித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோள்கள் அனைத்தும் சீனாவின் விண்வெளி ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாகச் செயற்கைக்கோள்கள் ஒட்டுமொத்த பூமியையும் படம் பிடிக்கத் துருவ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்; ஆனால், பாகிஸ்தானின் இந்த செயற்கைக்கோள்கள் ‘சாய்ந்த சுற்றுப்பாதையில்’ (Inclined Orbits) நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அவை உலகைச் சுற்றாமல் இந்திய நிலப்பரப்பிற்கு மேல் மட்டுமே தொடர்ச்சியாகச் சுற்றும்படி விசித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் எந்தவொரு முக்கியப் பகுதியையும், எல்லைப் பகுதி ராணுவ நடமாட்டங்களையும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துல்லியமாகப் படம் பிடித்துக் கண்காணிக்கும் திறன் இதற்கு உண்டு.

மேலும், இந்தச் செயற்கைக்கோள்களில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உள்ளதால், எடுக்கப்படும் புகைப்படங்களைச் சில நொடிகளிலேயே பகுப்பாய்வு செய்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனுப்பிவிடும். வேளாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மைக்காகவே இவை ஏவப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாகத் கூறினாலும், இது இந்தியாவுக்கு எதிரான சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டு ராணுவத்தின் உளவுத் திட்டம் என்றே பாதுகாப்பு நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

3 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

14 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

27 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

34 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

38 minutes ago

ஐயோ கடவுளே… 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… அதிர்ச்சி பின்னணி என்ன?… கொந்தளிப்பில் கிராம மக்கள்…!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டம், கரோத் தாலுகாவில் உள்ள லுக்கா கிராமத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல்…

38 minutes ago