Categories: சினிமா

என்னை இப்படிதான் மிரட்டினார் சிவாஜி சார்… ஷூட்டிங் அனுபவத்தை தனக்கேயுரிய பாணியில் பகிர்ந்த பார்த்திபன்!

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதன்பிறகு அவர் இயக்கிய ஹவுஸ்ஃபுல், இவன், உள்ளே வெளியே போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பிறகு அவரை திருமணம் செய்துகொண்ட பார்த்திபன் 12 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்தார்.

பார்த்திபன் தன்னுடைய சினிமா பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமானப் படங்களாகக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

பார்த்திபன் இயக்குனர் ஆவதற்கு முன்னால் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவர் இயக்கிய தாவணி கனவுகள் படத்தில் ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தில் பார்த்திபனுக்கு அதிகமானக் காட்சிகள் சிவாஜி கணேசனுடன் இருப்பது போல அமைந்திருக்கும். சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவம் பற்றி அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “நானும் சிவாஜி சாரும் ஒரு எமோஷனலானக் காட்சியில் நடிக்க வேண்டும். நான் வசனம் பேசி முடித்ததும் அவர் ரத்த வாந்தி எடுப்பது போன்ற காட்சி. நான் சொதப்பிவிட்டால் மறுபடியும் அந்த காட்சியை மீண்டுமெடுப்பதில் சிரமம் இருக்கும். அதனால் சிவாஜி சார் என்னை அழைத்து “நீ ஒழுங்கா நடிச்சாதான் உங்க இயக்குனருக்கு நல்லது. ஏன்னா இந்த படத்தோட தயாரிப்பாளரும் அவர்தான். அதனால் ஒழுங்கா நடிக்கணும்” என மென்மையாக மிரட்டினார். ஆனால் எனக்கு நாடகத்தில் எல்லாம் நடித்த அனுபவம் இருந்ததால் நான் ஒரே டேக்கில் நீண்ட வசனத்தை பேசி நடித்தேன். அதைப் பார்த்து அவர் என்னைப் பாராட்டினார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

அரசுப் பள்ளியா?… தனியார் பள்ளியா?… கடனாளியாகி மகனைப் படிக்க வைக்கும்… நடுத்தரக் குடும்பங்களின் அதிர்ச்சி முகங்கள்…!!

அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற குழப்பம் பல நடுத்தரக் குடும்பங்களை வாட்டும் ஒரு பொதுவான கேள்வி. உங்கள்…

4 minutes ago

விஐபி போனாதான் ரோடு போகுமா?… உழைக்கும் மனிதனின் உயிருக்கு விலையே இல்லையா?… மிதிவண்டி ஓட்டுநரைத் தள்ளிவிட்ட காவலர்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

மும்பையில் விஐபி வாகனம் செல்லும் போது போக்குவரத்து காவலர்களால் மிதிவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவமரியாதை குறித்து சிவசேனா…

5 minutes ago

உயிருடன் வந்த மனைவி… கட்டிப்பிடித்து அழுத கணவர்… குழந்தைகளை காணோமே… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு, பல நாட்களாகக் காணாமல் போன மனைவி உயிருடன் மீண்டு வந்து கணவரிடம்…

6 minutes ago

ஐயோ கொடுமையே… காதலியுடன் லுடோ விளையாடிய… பாஜக இளைஞர் தலைவர் படுகொலை… கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்… பதறவைக்கும் சம்பவம்…!

சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…

25 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

30 minutes ago

ஐயோ பாவம்… யாரென்று தெரியாமலேயே போன உயிர்… மின்தாக்குதல் விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளி பலியான சோகம்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

35 minutes ago