Categories: சினிமா

திட்டுவாரு… ஆனா?… அப்போதிலிருந்து இப்போது வரை- கவுண்டமணி பற்றி நெகிழ்ச்சியாகப் பேசிய செந்தில்.!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

செந்தில் கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். இப்படி 25 வருடங்களுக்கு மேலாக இணைந்திருந்த அவர்கள் கடைசி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்கவில்லை. அதன் பின்னர் தனித்தனியாக படங்களில் நடித்தாலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் செந்தில் தன்னுடைய சக கலைஞரான கவுண்டமணி பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அதில் “அப்போதில் இருந்து இப்போது வரை நான் நேசிக்கும் கலைஞர் கவுண்டமணிதான். அவர் எனக்கு அண்ணன்தான். அதேபோல நல்ல நண்பர். நான் தப்பா நடிச்சா திட்டுவாரு.  ஆனால் அதை அப்படியே மறந்துடுவார். மனசுல வச்சிக்க மாட்டாரு,. கூட நடிக்குற நடிகர்கள் எல்லோருக்கும் உதவியா இருப்பாரு” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

12 seconds ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

4 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

6 minutes ago

“விஜய் யாருடைய ஓட்டைப் பிரிப்பார்?”… அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த பூங்குன்றன்… 2026-ல் நடக்கப்போகும் அந்த ‘அமைதியான புரட்சி’ இதுதான்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…

8 minutes ago

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

9 minutes ago

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

13 minutes ago