Categories: சினிமா

நான் கிளாமரா நடிக்க காரணமே இதுதான்.. முதல்முறையாக மனம் திறந்த நடிகை நிவேதா பெத்துராஜ்…!!!

Spread the love

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை தான் நிவேதா பெத்துராஜ். பெரும்பாலும் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் நடிகைகளுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கும். முந்தைய கால கட்டங்களில் எல்லாம் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது என்பது அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது. சமூக வலைத்தளங்கள் தற்போது அதிகமாக வளர்ந்து விட்டதால் மிக எளிதாகவே மக்கள் மத்தியில் நடிகைகள் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படி 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நிவேதா பெத்துராஜ்.

இந்த படத்தில் அடியே அழகே என்ற ஒரு பாடல் மூலம் இவர் பிரபலமானார். அதன் பிறகு பொதுவாக என் மனசு தங்கம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மேலும் பிரபலமானார். பிறகு திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து சங்கத் தமிழன் என தமிழில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 2021 ஆம் ஆண்டு பொன்மாணிக்கவேல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தெலுங்கில் தான் தற்போது அதிக படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சினிமாவில் நடிக்க தொடங்கியதில் இருந்தே குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். அதன் பிறகு கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று நினைத்து தெலுங்கில் ஆளா வைகுந்த புர்ரமுலூ என்ற திரைப்படத்தில் நடித்தேன்.

பிறகு இறுதியாக தம்கீன் என்ற ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு முழு கிளாமராக நடனம் ஆடி இருப்பேன். உங்களுக்கு சவுகரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று உங்களுக்கு புரிந்து விட்டால் நிச்சயம் உங்களால் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும். இதற்கு என் பெற்றோர்கள் அப்போது புரிந்து கொண்டார்கள். நான் என் பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் தான் நடிப்பேன். படங்களில் என்னுடைய கவர்ச்சியும் அந்த அளவுக்கு தான் இருக்கும் என்று நிவேதா பெத்துராஜ் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

இதென்ன புது ட்ரெண்டா இருக்கு…? ராஜினாமா செய்தால் புதிய ஆள் எடுக்க மாட்டீங்களா…? கார்ப்பரேட் நிறுவனங்களைக் கிழித்த மும்பை பெண் சி.ஏ…!!

நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…

13 minutes ago

“பேசாம இந்தியாவுக்கே போயிட்டு வரலாம்…” ஒரு பல்லை பிடுங்குவதற்கு இத்தனை லட்சமா…? அமெரிக்க மருத்துவமனையின் கட்டணத்தை பார்த்துத் தலைசுற்றிப்போன NRI…!!

அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…

26 minutes ago

“இன்ஸ்டா ஸ்டிக்கரால் கிடைத்த லேப்டாப்…” நெட்டிசன்களின் இதயங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயல்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…

46 minutes ago

அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…

51 minutes ago

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

54 minutes ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

1 மணத்தியாலம் ago