அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திடீரெனப் பல் வலி ஏற்பட்டதால் அங்குள்ள பல் மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எக்ஸ்-ரே எடுப்பதற்கே 17,000 ரூபாய் வசூலித்த மருத்துவ நிர்வாகம், அந்த ஒரு பல்லை பிடுங்குவதற்குத் தோராயமாக 7.55 லட்ச ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளது.
மேலும், அவரிடம் மருத்துவக் காப்பீடு இருந்தபோதிலும், இன்சூரன்ஸ் கழித்தது போகத் தனது சொந்தப் பணத்தில் இருந்து மட்டும் 2.37 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான அவர், “அமெரிக்காவில் ஒரு பல்லை எடுப்பதற்குப் பதில், 1.13 லட்ச ரூபாயில் விமான டிக்கெட் எடுத்து இந்தியாவிற்குச் சென்று வரலாம்; இந்தியாவில் இதே சிகிச்சையை வெறும் 15,000 முதல் 20,000 ரூபாய்க்குள் முடித்துவிடலாம்” எனக் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் என்.ஆர்.ஐ மக்கள் சந்திக்கும் இதுபோன்ற மறைமுக மருத்துவச் செலவுகள் குறித்து அவர் பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல நெட்டிசன்களும் “அமெரிக்க மருத்துவத் துறை மிகவும் விலையுயர்ந்தது, பேசாமல் இந்தியாவுக்கு வந்து சிகிச்சையை முடியுங்கள்” என அவருக்கு யோசனை தெரிவித்து வருகின்றனர்.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…