கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருக்கும் தேசிய விருதை பெற்றுத் தந்தது. சேவல் சண்டையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரமான ‘பேட்டைக்காரன்’ வேடத்தில் இலங்கைத் தமிழரான வி.ஐ.எஸ். ஜெயபாலன் நடித்திருந்தார். இந்தப் பாத்திரத்தின் குரலுக்கு நடிகர் ராதாரவி டப்பிங் பேசியது கூடுதல் பலமாக அமைந்தது.
ஆனால், இந்த முக்கியமான பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் பார்த்திபன் தான் என்று அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் முதலில் தன்னிடம்தான் இந்தக் கதையைச் சொன்னதாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது பார்த்திபன், தனது சொந்த இயக்கத்தில் தனுஷுடன் ஒரு படத்தில் நடிப்பதற்குத் திட்டமிட்டிருந்தார். ஒரே நேரத்தில் ஒரே கதாநாயகனுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தால், ஒரு படத்தின் எதிர்பார்ப்பு அடுத்த படத்தைப் பாதிக்கலாம் என்று கருதி, தானே நேரடியாக வெற்றிமாறனின் வீட்டிற்குச் சென்று, ‘ஆடுகளம்’ படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகப் பார்த்திபன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…