“மனைவி மீது வீசிய கல், பலியானது பச்சிளம் குழந்தை”…. கோபத்தில் தந்தை செய்த பயங்கர சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூரில் உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு, எதிர்பாராத விதமாக ஒரு கொடிய விபத்தாக முடிந்தது.

இந்தத் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது மனைவியைத் தாக்குவதற்காக ஒரு கல்லை எடுத்து வீசியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தக் கல் குறிதவறி அருகில் இருந்த அவர்களின் 4 வயது மகனின் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தான்.

படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தம்பதியினரின் தனிப்பட்ட மோதல் மற்றும் கோபத்தினால் ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

7 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

7 மணத்தியாலங்கள் ago