#image_title
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியை சூப்பர் வில்லன் ஆக்கியது பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம். அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகர் ஆனார்.
படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தைத் தயாரித்தது கதாசிரியர் கலைஞானம். அவருக்கு சமீபத்தில் ரஜினி ஒரு வீடு வாங்கிக் கொடுத்து நன்றிக் கடனை திருப்பி செய்தார்.
ஆனால் அதன் பிறகு ரஜினியை ஒரு வெற்றிகரமான கதாநாயகன் ஆக்கியது பஞ்சு அருணாச்சலம்தான். அவர்தான் பிரியா என்ற படத்தில் ரஜினியைக் கதாநாயகன் ஆக்கி சிங்கப்பூர் எல்லாம் சென்று படமாக்கி வந்தார். அந்த படத்துக்கு ரஜினியிடம் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார், பஞ்சு அருணாசலம்.
அப்போது ரஜினி தயங்கியவாறே “நான் வெளியே ஒரு படத்துக்கு 30 ஆயிரம் வாங்குறேன். நீங்க சிங்கப்பூர் எல்லாம் போறீங்க, ஒரு 35 ஆயிரம் கொடுங்க” எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டு ஷாக் ஆன பஞ்சு அருணாசலம் “என்னடா, நீ என்ன விட அப்பாவியா இருக்க.. உன் மார்க்கெட் நிலவரம் என்ன தெரியுமா? விநியோகஸ்தர்கள் எல்லாம் உன் படத்த வாங்க போட்டி போடுறாங்க.
உனக்கு சம்பளம் ஒரு லட்சம் தர்றேன். வேண்டாம் அது ராசியில்ல, ஒரு லட்சத்து பத்தாயிரம் தர்றேன் என்று சொல்லி எனக்கு முதலில் லட்சத்தில் சம்பளம் கொடுத்தார்” எனக் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…