பணம், பதவி, வசதி வந்தாலும்… திருடுறதுல ஒரு சந்தோசம்… 15 வருஷமா இந்த தொழில் செய்யுறேன்… செயின் பறிப்பு வழக்கில் கைதான ஊராட்சிமன்ற தலைவி வாக்குமூலம்..!!

Spread the love

பணம், புகழ் வசதி வந்தாலும் திருடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக 15 வருடமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாக செயின் பறிப்பு வழக்கில் கைதான திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவி வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் சென்னை திரும்பிய போது ஐந்து சவரன் நகையை பெண் ஒருவர் திருடியுள்ளார். கோயம்பேடு போலீசார் இது குறித்து விசாரித்ததில் திருப்பத்தூர் மாவட்டம்  நரியம்பட்டு ஊராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த பாரதி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல திடுக்கிடும்  தகவலை கூறியுள்ளார்.

அதாவது ஓடும் பேருந்தில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளோடு நான் பேச்சு கொடுத்து நகை பறிப்பேன். கடந்த 15 வருடங்களாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் ஒன்று கட்டியுள்ளேன். ஊராட்சித் தலைவர் ஆன பிறகு திருட்டு தொழிலை விடும்படி பலரும் கூறினார்கள். என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை. பணம், பதவி, வசதி வந்த பிறகும் திருடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக இந்த தொடரில் ஈடுபட்டு வருகிறேன்,. இனி திருடக்கூடாது  என்று சபதம் எடுப்பேன். ஆனால் திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோற்றுவிடுகிறேன். திருட்டுப்பழக்கத்தால் நான் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

4 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago