தில்லி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,979 ஆசிரியர் மற்றும் அறிவியல் உதவியாளர் உள்ளிட்ட பலதரப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தில்லி துணைநிலைச் சேவைகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பின் கீழ் ஜூனியர் சயின்டிஃபிக் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் , அசிஸ்டன்ட் ஆர்க்கிவிஸ்ட், ஐடி அசிஸ்டன்ட், டேட்டா பிராசசிங் அசிஸ்டன்ட் மற்றும் டிரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பணியிடங்களுக்கு ஏற்ப ஐடிஐ பிளஸ் 2 தகுதி, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை/முதுகலை பட்டம் அல்லது பி.எட் போன்ற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வாரியத்தால் நடத்தப்படும் இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியலின்படி தேர்வு செய்யப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பொது ஆங்கிலம் மற்றும் கணித நுண்ணறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். தகுதியுடைய நபர்கள் www.dsssbonline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2026, ஜூலை 15 ஆகும்.
தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வரும் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…