சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரம் கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலையோரங்களில் கைவிடப்பட்டு தூசி படிந்து கிடக்கும் இந்த வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சமூக விரோத செயல்களுக்கான இடமாகவும் அவை மாறிவருகின்றன. மேலும், மழைநீர் தேங்கி டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், இந்த வாகனங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், நோட்டீஸ் ஒட்டப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வாகனங்களை உரிமையாளர்கள் அகற்றாவிட்டால், அவை போலீசாரின் உதவியுடன் பறிமுதல் செய்யப்படும். கடந்த காலங்களில் உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை மீட்க 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டது; ஆனால், இந்த முறை எந்தவித கால அவகாசமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் எக்காரணம் கொண்டும் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், அவை அனைத்தும் பொது ஏலத்தில் விடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…
தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு…