ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி… அன்று ரூ.5.70 லட்சம் கோடிக்கு கூச்சலிட்ட திமுக.. இன்று ரூ.10 லட்சம் கோடி கடனைக் குவித்தது ஏன்..? சிக்கலில் மாட்டிய ஸ்டாலின்..!!

Spread the love

தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த வெள்ளை அறிக்கையை மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டதைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பழைய அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போதைய வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை ₹10 லட்சம் கோடியைக் கடந்துள்ளதோடு, பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் அது ₹13.18 லட்சம் கோடியைத் தாண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் தற்போது சுமார் ₹1.29 லட்சம் கடன் சுமை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அரசியல் விவாதம் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் இடைக்கால பட்ஜெட்டின் போது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வைரலாகி நெட்டிசன்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அரசு 10 ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் தலையில் ₹5.70 லட்சம் கோடி கடனைச் சுமத்திவிட்டுச் செல்வதாகவும், அமைச்சர்கள் “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என வாரிச் சுருட்டியதாகவும் ஆவேசமாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட கடன் வெறும் ₹44,084 கோடி மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள வெள்ளை அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக ₹4.96 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு, மொத்த கடன் ₹10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் மற்றும் தவெக போன்ற எதிர்க்கட்சியினர், “அதிமுகவின் 10 ஆண்டு கால கடனை விமர்சித்த திமுக, வெறும் 5 ஆண்டுகளில் ₹4.96 லட்சம் கோடி கூடுதல் கடனை ஏற்றியது ஏன்?” என்றும், “திமுக ஆட்சியில் மூலதனச் செலவை விட வட்டிக்குத்தான் அதிகம் செலவாகிறது” என்றும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago