தமிழக அரசியல் களத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தடுத்த நகர்வுகள் ஆளும்கட்சியினரிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்களான அன்பில் மகேஸ் மற்றும் பி. மூர்த்தி ஆகியோர் மீதும் DVAC தனது சோதனைக் கரங்களை நீட்ட ஆயத்தமாகி வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த திமுக ஆட்சியின்போது துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலினின் நிழலாகவும், அவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அன்பில் மகேஸ் வலம் வந்தவர். அதேபோல், வணிகவரித்துறை அமைச்சரான மூர்த்தி, “மேலிடத்து உத்தரவின் பேரிலேயே அனைத்து முடிவுகளையும் எடுத்தேன்” என இப்போதே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த அமைச்சர்களை நெருக்கி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் பின்னணியில் இருந்த முதன்மை புள்ளிகளைப் பிடிமுறுக்க முடியும் என புலனாய்வு அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த தொடர் நடவடிக்கைகளின் முதன்மை இலக்கு உதயநிதி ஸ்டாலின் தான் என்பதே செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ரகசிய பேச்சாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரமாக ஆயத்தமாகி வரும் வேளையில், கட்சியின் முக்கியத் தூண்களாகவும் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய கரங்களாகவும் திகழும் அமைச்சர்களை ஊழல் வழக்குகளில் முடக்குவது, திமுகவின் தேர்தல் பிரச்சார வேகத்தை கணிசமாகக் குறைக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள வியூகமாகக் பார்க்கப்படுகிறது. உதயநிதிக்கு நெருக்கமான அமைச்சர்களின் மூலமாகவே அவரையோ அல்லது அவரது அதிகார மையத்தையோ நேரடியாக நெருங்க முடியும் என்ற கணக்கீட்டில் இந்த ஆபரேஷன் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், அறிவாலய வட்டாரங்களில் பெரும் பரபரப்பும் அதிர்வலைகளும் தொற்றிக்கொண்டுள்ளன.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…