“திமுக கொடுத்த அந்த ஒரு ராஜ்யசபா எம்பி சீட்” யாருக்கு தெரியுமா..? பிரேமலதாவின் மாஸ்டர் பிளான்.!!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக மற்றும் திமுக இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உடன்படிக்கையின்படி, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட் மற்றும் 10 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா தலைமையில் தேமுதிக எடுக்கும் இந்த முக்கிய அரசியல் நகர்வு தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் அந்த ஒரு ராஜ்யசபா எம்பி சீட், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரான விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது. கட்சியின் அடுத்தகட்டத் தலைவராக உருவெடுத்து வரும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது, கட்சியைப் பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் தேர்தலில் விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த விஜயகாந்த் ஏற்கனவே வெற்றி பெற்ற இந்தத் தொகுதிகள் தேமுதிகவின் கோட்டையாகக் கருதப்படுவதால், அங்குப் போட்டியிடுவது வெற்றியை எளிதாக்கும் என அக்கட்சி மேலிடம் கருதுகிறது.

Soundarya

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

4 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

17 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

22 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

27 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

31 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

36 minutes ago