ரூ. 10,000 தள்ளுபடியில் OnePlus ஸ்மார்ட்போன்… யாருக்கெல்லாம் இந்த Offer கிடைக்கும் தெரியுமா…?

Spread the love

தற்போதைய காலகட்டத்தில் OnePlus ஸ்மார்ட்போன்கள் மிக பிரபலமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாடலாக அந்த நிறுவனமும் வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பும் ஒரு ஸ்மார்ட்போனாக OnePlus இருக்கிறது. தற்போது இந்த OnePlus ஸ்மார்ட்போன் பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அது என்ன மாடல் போன் அதன் விவரம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான OnePlus விரைவில் இந்தியாவில் OnePlus 13 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்நிலையில் இதனின் முந்தைய மாடலான OnePlus 12 இந்தியாவில் பத்தாயிரம் ரூபாய் வரை பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

OnePlus 12 ஆண்ட்ராய்டு பிளாஷ்ஷிப் மொபைல் ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் 6. 82 இன்ச் 2K Pro XDR BOE X 1 OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸரை இது கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ரியர் கேமரா சிஸ்டமை கொண்டிருக்கிறது. இதில் OIS உடன் கூடிய 50MP Sony LYT-808 பிரைமரி கேமரா 48MP Sony IMX581 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3 இண்டு டெலி போட்டோ ஜூம் கொண்ட 64 எம்பி 064 பி பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட் போனில் இருக்கிறது.

இந்த OnePlus 12 ஸ்மார்ட்போனின் ஹை எண்டு மாடலின் விலை ரூபாய் 69, 999 ஆகும். தற்போது ரூ 3000 வரை குறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தற்போது இந்த போனில் விலை 66,999 ஆக குறைந்துள்ளது. ஒன் கார்டு ஃபெடரல் பேங்க் கார்டு மற்றும் rbl கிரெடிட் ஆகியவற்றை பயன்படுத்தி அமேசானில் OnePlus 12 மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூபாய் 7000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் oneplus 12 மொபைலின் 12 ஜிபி/256ஜிபி வேரியன்டை ரூபாய் 54,999 க்கும் 16 ஜிபி/ 512ஜிபி வேரியண்டை ரூபாய் 59, 999-க்கும் வாங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடியில் இந்த OnePlus 12 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

admin

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

9 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

9 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

10 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

10 மணத்தியாலங்கள் ago