Connect with us

CINEMA

கூலி படத்தை காலி பண்ண இசைஞானி செய்த வேலை.. இளையராஜா அனுப்பிய நோட்டீஸால் அதிர்ந்து போன பட குழு..!!

யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக லியோ படம் ரிலீஸ் ஆனது. தளபதி விஜய் நடித்த லியோ படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Thalaivar 171: Rajinikanth flaunts gold in first look from film with Lokesh Kanagaraj; title to be announced soon - Hindustan Times

   

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தலைவரின் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நோட்டீசை அனுப்பியுள்ளது. அதில் அனிருத் வா வா பக்கம் வா என்ற இளையராஜாவின் பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளார்.

Lokesh Kanagaraj on Thalaivar 171: 'I am going to explore Rajinikanth's side that is…' | Tamil News - The Indian Express

அனுமதி இல்லாமல் தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த பாடல் மற்றும் இசையின் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக அனுமதி பெறாமல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் காப்புரிமை சட்டம் 1957 இன் படி இது குற்றமாகும்.

ரஜினி சொன்னா வாய்ப்பு கொடுக்கணுமா?!… கடுப்பாகி பிரபலத்தை பழிவாங்கிய இளையராஜா!.. - CineReporters

விக்ரம் படத்தில் இடம் பெற்ற விக்ரம் விக்ரம் பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை. மேலும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான பைட் கிளப் படத்தில் இடம் பெற்ற என் ஜோடி மஞ்ச குருவி பாடலின் இசை மறு உருவாக்கம் செய்ததற்கு அனுமதி பெறவில்லை என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் இளையராஜா தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக வா வா பக்கம் வா பாடலை கூலி படத்தின் டீசரில் மறு உருவாக்கம் செய்ததற்கு உரிய அனுமதி பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த இசையை டீசரிலிருந்து நீக்க வேண்டும் என இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்துள்ளார். இது குறித்து தான் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top