போடு ரகிட ரகிட… இனி இன்டர்நெட் இல்லாமல் மொபைலில் லைவ் டிவி பார்க்கலாம்… வருகிறது சூப்பரான வசதி…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது. அதிலும் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு மக்களின் பிரதான பொழுது போக்காக செல்போன் மாறிவிட்டது. செல்போனுக்கு இணை வசதி என்பது ஆக்சிஜன் போல உள்ளது. இணைய வசதி இல்லாமல் youtube இல் வீடியோ, லைவ் தொலைக்காட்சிகளை பார்க்க முடியாது.

ஆனால் இதனை மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டைரக்ட் டு மொபைல் என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியில் தொலைத்தொடர்புத்துறை இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக லைவ் டிவி நிகழ்ச்சிகளை மொபைலில் பார்வையாளர்கள் இணைய வசதி இல்லாமல் பார்க்க முடியும். தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இந்த டெக்னாலஜியை கூடிய விரைவில் இந்தியாவில் 19 நகரங்களில் பெருமளவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செயற்கைக்கோள் மூலம் நேரடியாக செல்போனுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப அடிப்படையில் இது இயங்கும் என தெரிகிறது. இதற்காக பிரத்தியேக சிப் பொருத்தப்பட்ட செல்போன்களை தயாரிக்கும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட உள்ளன. ரேடியோ ஸ்டேஷனிலிருந்து வரும் சிக்னலை ரிசீவர் பிடித்து எப்படி ஒளிபரப்பு செய்கின்றதோ அதேபோல டிவி சேனல்களின் சிக்னல்களை இந்த சிப் பிடித்து வீடியோவை ஒளிபரப்பு செய்யும்.

அதன்படி பெங்களூரில் இருக்கும் சான்கியா லேப்ஸ் என்ற நிறுவனம் இந்த சிப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக சில முக்கிய நகரங்களில் பிரசார் பாரதி சேனல்கள் சேவையை வழங்க உள்ளது. அதன் பிறகு இதில் மற்ற சேனல்கள் சேர்க்கப்படலாம். நாடு முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும். பேரிடர் காலங்களில் செல்போன் சிக்னல் இல்லாத பகுதிகளுக்கும் இது பெரிதும் பயனளிக்கும் என்று தெரிகிறது. இந்த சேவையை முடிந்த வரையில் விரைவாக கொண்டு வர அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago