பர்தா அணிந்து வந்த பெண்… கையில் சுத்தியல்… சென்னை மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்….!

Spread the love

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் மனைவியிடம் நகை பறிக்க முயன்று, அவரை சுத்தியலால் தாக்கிய இளம்பெண் நித்யா என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 10-ஆம் தேதி, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயதான ராணி என்பவர் தனது கணவரைச் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தபோது, கழிவறை அருகே பர்தா அணிந்து வந்த மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். அந்த நபர் ராணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றதுடன், அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்து சுத்தியலால் ராணியின் தலையில் தாக்கிவிட்டுத் தப்பியோடினார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணிக்கு மருத்துவமனையில் ஐந்து தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மருத்துவமனையில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்து வந்த பெண் குறித்த துப்பு துலங்கியதை அடுத்து, தரமணியைச் சேர்ந்த 29 வயதான நித்யா என்பவரை போலீசார் நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நித்யா அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அப்போது ராணிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணி தன்னைத் திட்டியதால் பழிவாங்கத் திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார். போலீசில் பிடிபடாமல் இருக்க தியாகராய நகரில் ஒரு பர்தா உடையையும், தாக்குவதற்கு ஒரு சுத்தியலையும் வாங்கி இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். நகை பறிப்பு முயற்சியாக முதலில் கருதப்பட்ட இந்தச் சம்பவம், விசாரணையின் இறுதியில் தனிப்பட்ட முன்விரோதத்தின் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியாகியுள்ளது.

Nanthini

Recent Posts

“மாணவர்களா? மனிதாபிமானமற்றவர்களா?… திருப்பதிக் கல்லூரி மாணவர்களின் அட்டூழியம்… வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்”..!!!

திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின்…

13 minutes ago

“எனக்கு 60 உனக்கு 25”.. 35 வயது தான் வித்தியாசம்… கிராமமே மிரண்டு போன ‘காதல் திருமணம்’.. வைரலாகும் தாத்தா-பேத்தி காதல் கதை…!!

60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…

23 minutes ago

BREAKING: தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் சவரனுக்கு ரூ.960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000-ம் அதிரடி சரிவு..!!

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…

44 minutes ago

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

48 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

1 மணத்தியாலம் ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

1 மணத்தியாலம் ago