#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் மூலமாக இயக்குனராகவும் வெற்றி கண்டார் தனுஷ். இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ராயன் திரைப்படம் வெற்றியடைந்தது. இந்த நிலையில் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா சுரேந்தர், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற 30-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த பாடலுக்கு கோல்டன் ஸ்பேரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடல் குறித்த புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தனுஷ் இந்த பாடலின் வரிகளை எழுதி இருப்பதாக எஸ்.ஜே சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
உடனே சமூக வலைதள பக்கத்தில் அனைவரும் யாத்ரா தனுஷ் பாடல் ஆசிரியர் ஆனார் என பேசி வந்தனர். இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியது சுபலட்சுமி, ஜிவி பிரகாஷ் குமார், தனுஷ், அறிவு ஆகியோர் இணைந்து அந்த பாடலை பாடியுள்ளனர். மேலும் பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…