தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செல்லத்துரையின் மகள் பிருந்தாதேவி(34), மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது கணவர் கிருஷ்ணகுமார் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில், பிருந்தாதேவி தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அவர் மாயமானதை அடுத்து, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலையில் பிருந்தாதேவி பக்கத்து வீட்டில் வசிக்கும் மாரிமுத்து என்பவரது வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சரவணப்பிரியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தால் பிருந்தாதேவி படுகொலை செய்யப்பட்டது அம்பலமானது. மாரிமுத்துவுக்கும் பிருந்தாதேவிக்கும் இடையே தவறான பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் மாரிமுத்துவின் மனைவி சரவணப்பிரியா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, மாரிமுத்து கதவை திறந்து வைத்து பிருந்தாதேவியை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்ததை நேரில் கண்ட சரவணப்பிரியா ஆத்திரமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் உச்சகட்டமாக, சரவணப்பிரியா தனது கணவர் முன்னிலையிலேயே பிருந்தாதேவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர், சடலத்தை மறைப்பதற்காக ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, சரவணப்பிரியாவின் தம்பி கார்த்திக் என்பவரின் உதவியுடன் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனி பகுதியில் மாரிமுத்துவிற்குச் சொந்தமான நிலத்தில் குழி தோண்டி பிருந்தாதேவியின் உடலை ரகசியமாக புதைத்துள்ளனர்.
போலீசார் மாரிமுத்து மற்றும் சரவணப்பிரியாவை கைது செய்து, அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் புதைக்கப்பட்டிருந்த பிருந்தாதேவியின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த கொடூரக் கொலைக்கு உடந்தையாக இருந்துவிட்டு, தற்போது தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இரு குடும்பங்களின் நிம்மதியையும் சீர்குலைத்து, ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த இந்த விபரீதச் சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசர் தாலுக்கா கிராமம் ஒன்றில், பெற்ற தந்தையே தனது 13 வயது மகளைப் பாலியல்…
ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…