அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக தான்… பொங்கி எழுந்த நயினார் நாகேந்திரன்…!

Spread the love

விருதுநகர் மாவட்டம் அரும்புக்கோட்டையில் சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றிய போது , “நெல்லையில் வருகின்ற 17ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டிற்கு, அரும்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆயிரம் தொண்டர்களை   திரட்டி வரவேண்டும். மண்டல பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்தந்த பாகம் எண் மற்றும் வாக்காளர் விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான். வரும் காலங்களில் பாஜக தொண்டர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் உரிய மரியாதை கிடைக்க உறுதுணையாக இருப்பேன். எங்களது மனதில் இடம்பெறும் வகையில் உங்களது பணி இருக்க வேண்டும்”என்று உரையாற்றினார் .

இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து கூட்டணி கட்சியினர் ஒன்று கூடி கலந்துரையாடி முடிவெடுப்போம்.  ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகிச் சென்று விட்டதை பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.

Srimathi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

1 மணத்தியாலம் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago