தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் வெளியான அவரது படம் அன்னபூரணி 75வது படம். லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாரா அழைக்கப்படுகிறார். அவரை மையப்படுத்திய கதைகள், சமீபகாலமாக அதிகமாக வந்துக்கொண்டு இருக்கின்றன. அவர் படத்தில் நடிக்க ரூ. 12 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்னபூரணி படம் வெளியான நிலையில், கனமழை காரணமாக எதிர்பார்த்த வசூலை பெறாதது ஏமாற்றத்தை தந்துள்ளது. அதனால் இதுவரை பிரமோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாத நயன்தாரா, சமீபமாக அன்னபூரணி படத்துக்காக பிரமோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார்.

Nayanthara
நயன்தாரா நடித்த 75வது படம்தான் அன்னபூரணி, கடந்த 1ம் தேதி வெளியானது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கூறியதாவது, இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற எனது பெயருக்கு முன்னால், அந்த டேக் வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். எனக்கு தெரியாமல், அதை படத்தில் இடம்பெற செய்துள்ளனர்.

Nayanthara
இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்த இடத்துக்கு இன்னும் வரவில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது. இல்லை நான் பெண் என்பதால், அதை மத்தவங்க ஏற்றுக்கொள்ள மாட்டேங்கறாங்க என்றும் தோன்றுகிறது. 10 பேர் இந்த டேக்கை ஏற்றுக்கொண்டாலும் மீதி 50 பேர் திட்டவே செய்கின்றனர். இந்த பட்டத்துக்காக நான் நடிக்கவில்லை. இந்த டேக்குக்காக என் கேரக்டர், கதையை, ஸ்கிரிப்ட்டை நான் தேர்வு செய்வதில்லை. ஆனால் எல்லாவற்றையும் கடந்து, மக்களின் அளவு கடந்த அன்புதான் அந்த பட்டம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.
