Connect with us

CINEMA

பிரபல யூ டியூபர் இயக்கத்தில் ஹீரோயினாக களமிறங்கும் நடிகை நயன்தாரா…! கோலாகலமாக தொடங்கிய ஷூட்டிங்…! வெளியான புகைப்படங்கள்…!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பில் அடுத்து உருவாகுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தொடங்கி இருக்கின்றது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

   

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து வாடகை தாயின் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். இவர் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல இரண்டு காதல் , கனெக்ட், O2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் லூசிபர், மலையாளத்தில் பிரேமம் இயக்குனர் அல்போன் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் உள்ளிட பல திரைப்படங்களில் நடித்த வந்தார். பின்னர் முதன்முதலாக ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடி வசூல் செய்த சாதனை செய்தது.

தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் 75 ஆவது திரைப்படமாக உருவாகும் படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தை நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்க ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படம் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகின்றது. இந்த வரிசையில் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் மண்ணாங்கட்டி since 1960 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் டியூட் விக்கி எழுதி இயக்க நயன்தாராவுடன் இணைந்து நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கொடைக்கானலில் ஆரம்பமாகி இருக்கின்றது. கொடைக்கானல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பட குழுவினர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top