போர் எதிரொலி!… பாகிஸ்தானில் இருளும் மரண அடியும்!.. இன்று முதல் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு… மக்கள் கடும் அவதி…!!

Spread the love

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளின் எரிபொருளைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு தற்போது நாடு தழுவிய மின்வெட்டை அறிவித்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மின்வெட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சகம், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் மின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்கவும், எரிசக்தி தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, இரண்டேகால் மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை மின்கட்டணம் உயர்வது தவிர்க்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தத் திட்டமிட்ட மின்வெட்டிலிருந்து பாகிஸ்தானின் முக்கிய வணிக நகரங்களான கராச்சி மற்றும் ஐதராபாத் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோடை காலத்தின் தொடக்கத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கம், பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Muthu Mani

Recent Posts

உஷார்! உங்க போனுக்கும் இந்த மெசேஜ் வரலாம்… வடமாநில கும்பலின் மார்பிங் மிரட்டலுக்கு பலியான 20 வயது இளைஞர்… வெறும் 3000 ரூபாய் கடனுக்கு இப்படியா…!

ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

8 minutes ago

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

25 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

49 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

54 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

56 minutes ago