Connect with us

CINEMA

பல இடங்களில் போராட்டம்.. கடைசியில் தன் மகனின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு நெப்போலியன் செய்த மிகப்பெரிய உதவி..

தமிழ் சினிமாவில் நடிப்பு திறமையால்  தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர்  நெப்போலியன். நாயகன், வில்லன், குணசித்ர நடிகர் என பல்வேறு சிறப்புகளை கொண்ட இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் களமிறங்கி அதிலும் வெற்றிபெற்று காட்டினார். 1991ல் பாரதிராஜவால் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

   

இதைத்தொடர்ந்து  சின்ன தாயி, இது நம்ம பூமி, ஊர் மரியாதை, பங்காளி, தர்ம சீலன், மறவன், எஜமான், எட்டுப்பட்டி ராசா, சுயம்வரம், அய்யா என கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார். இப்படி திரையுலகில் கொடிகட்டி பறந்த நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்ற மகன்களும் உள்ளனர்.

தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். ஏனெனில் அவருடைய மூத்த தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு 4 வயது இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டாலும், 10 வயதில் தனுஷால் நடக்கமுடியாமல் போகும் என்றும், 17 வயது வரை தான் அவர் உயிர் வாழ்வார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று அலைந்தவருக்கு,  கைகொடுத்தது நாட்டு மருத்துவர்கள் தான். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூர் என்கிற கிராமத்தில் பரம்பரையாக நாட்டு வைத்தியம் செய்பவர்களிடம் தனது மகனை அழைத்து சென்றுள்ளார்.

#image_title

அந்த ஊரிலேயே வீடு எடுத்து தங்கி சிகிச்சையும் எடுத்து கொண்டு மகனை காப்பாற்றினார்.  தன் மகனை காப்பாற்றிய அந்த வைத்தியருக்காக ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றையும் கட்டித் தந்தார். தற்போது மயோபதி என்கிற பெயரில் செயல்பட்டு வரும் அந்த மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்து மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

 

Continue Reading

More in CINEMA

To Top