தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாக ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதால் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி சமீபத்தில் இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையை நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையனை தொடர்ந்து இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ளார். அங்கு அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் சி.பி ராதாகிருஷ்ணனை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகல், அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம், பாஜக உட்கட்சி பிரச்சனைகள் குறித்து பேச உள்ளாராம். மீண்டும் தமிழக அரசியல் பஞ்சாயத்து டெல்லியில் கூட உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…
தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது அரசியல் மற்றும் நிர்வாக…
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால்,…
தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…