பாமகவின் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்த அவர் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கிராமங்களை நோக்கி என்ற பெயரில் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய ராமதாஸ், பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய மும்மூர்த்திகள் தன்னிடம் வந்து என்ன வேண்டும் என்று கேட்டால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் இருக்கக் கூடாது என கேட்பேன். தனக்கு பதவி என்பது முக்கியமில்லை. நான் நினைத்திருந்தால் ஜனாதிபதி ஆகி இருக்க முடியும். எல்லா பிரதமர்களும் தனது நண்பர்கள் என்றும் பிரதமர் மோடி தமிழகம் வந்தால் தன்னை கட்டி அணைத்துக் கொள்வார் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ள.
தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என குறிப்பிட்ட ராமதாஸ், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசுக்கு காலக்கெடு நிறைவடைந்த நிலையில் இதுவரை அன்புமணி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த சமயத்தில் ராமதாஸ் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருப்பது பாமகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…