தேமுதிக தலைவர் மற்றும் முன்னணி நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்த நிலையில் அனைத்து திரையுலகினரும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் அவரது தாயாருடன் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் வீட்டிற்கும் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு, நடிகர் ராகவா வெளியிட்ட வீடியோ மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதில் அவர் கூறியது என்னவென்றால், கண்ணுபட போகுதையா திரைப்படத்தில் வெளியான “முக்குத்தி முத்தழகு” என்ற பாடலுக்கு நான் கோரியோகிராபர் பண்ணிருந்தேன் அப்போது கேப்டன் விஜயகாந்த் அவரை மிகவும் பாராட்டியதாகவும் இன்னும் நீ நல்ல பண்ணனும் என்று சப்போர்ட் பண்ணியதாகவும் கூறியிருந்தார்.
மேலும் பிரேமலதா விஜயகாந்தின் தங்கை அவரை பார்த்து, மாஸ்டர் நீங்கள் தான் சண்முக பாண்டியனை பார்த்து கொள்ளவேண்டும் என்று கூறினார். அந்த வார்த்தை அவரை மிகவும் உறுத்தியாக அந்த வீடியோவில் குறிப்பிட்டியிருந்தார். கேப்டன் விஜயகாந்த் நடிக்கும்போது பல இயக்குனர்களையும் நடிகர்களையும் உருவாக்கியுள்ளார். மேலும் இவர் உதவி என்று கேட்டுக் கொண்டு வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் எல்லா உதவியும் செய்யும் மாமனிதர்.
கேப்டன் விஜயகாந்தால் தூக்கிவிடப்பட்ட வரிசையில் டாப் 10 நடிகரான விஜய்யும் உண்டு. 2015 ல் கேப்டன் குடும்பத்தினர் நடிகர் விஜயிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். அதாவது கேப்டன் விஜயகாந்த் மகனான நடிகர் சண்முக பாண்டியனை விஜயுடன் சேர்ந்து கெஸ்ட் ரோல் செய்வதற்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இதனை பெரிதாக பொறுப்பெடுத்தாமல் தருகிறேன் தருகிறேன் என்று காலம் தாமதித்தே சென்றுள்ளார் நடிகர் விஜய். இந்த காரணத்தினால் தான் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
மாஸ்டர் ராகவா லாரென்ஸ் கதை இருந்தா சொல்லுங்க நான் சண்முக பாண்டியன் கூட நடிக்கிறேன் என்றும் , இல்லையென்றால் அவர் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலாக கூட நான் சந்தோசமாக நடிக்கிறேன் என்று வீடியோவில் கூறியிருக்கிறார். மாஸ்டர் ராகவா வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.