#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு. தற்போது அவர் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் ரிலீஸாகாமலும், ட்ரெய்ன் படம் இறுதி கட்டத்திலும் உள்ளன.
2000 களில் இளையராஜா தன்னுடைய திரைப்பட வாய்ப்புகளைப் பெரியளவில் இழந்தார். அப்போது அவரை நாடிச் சென்ற இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். அவர் படங்களில் இளையராஜா கொடுத்த பின்னணி இசையும் பாடல்களும் இன்றளவும் நெஞ்சைத் தொடுபவை.
அப்படி இளையராஜாவோடு தொடர்ந்து பயணித்த மிஷ்கின் ‘சைக்கோ’ படத்துக்குப் பிறகு பிரிந்தார். இனிமேல் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. அதற்கானக் காரணம் குறித்து பேசியுள்ள மிஷ்கின் “சைக்கோ படத்துக்கு ஒரு பாடலை ராஜா சாரே எழுதினார். அந்த பாடல் சுத்தமாக நன்றாக இல்லை என்று நான் சொல்லிவிட்டேன். அதன் பிறகு கபிலனை வைத்து நான் பாடல் எழுதினேன்.
அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடவேண்டும் என நான் சொன்னேன். ஆனால் அவர் முடியவே முடியாது என்றார். ஆனால் ஒரு இயக்குனராக நான் பிடிவாதமாக இருந்தேன். அதனால் அவர் ரெக்கார்டிங்குக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதையடுத்து நான் அவரை அவமரியாதை செய்துவிட்டதாக சொல்லி என்னை பார்க்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவரை இந்த உலகிலேயே மதிப்பவன் நான்தான்.” எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…