#image_title
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வணங்கான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக வரிசையாக 5 படங்களை வெளியிட அருண் விஜய் நடித்து முடித்த படங்கள் எல்லாமே வெளிவரப்போகிறது. அதன்படி எந்தெந்த படங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
அருண் விஜய் மற்றும் நடிகை ரெஜினா போன்றவர்கள் நடித்த பார்டர் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இப்போது வணங்கான் ரிலீஸ்க்கு பிறகு இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார்.
கிரிஷ் திருகுமரன் இயக்கத்தின் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ட தல. சித்தி இதானி இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமும் அடுத்ததாக வெளிவர காத்திருக்கிறது.
தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 70 சதவீதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதுவும் அடுத்த ரிலீசுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது. இந்த படத்திற்கு தற்போது அருண் விஜய் டப்பிங் பேசி வருகிறார்.
ரத்தின சிவா இயக்கத்தில் அருண் விஜய் ,வம்சி கிருஷ்ணா ,கார்த்திகா நாயர் போன்றவர்கள் நடித்துள்ள திரைப்படம் வா டீல். இந்த படம் சரியான சரியாக வியாபாரம் ஆகாததால் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடித்த திரைப்படம் அக்னி சிறகுகள். கடந்த அக்டோபர் மாதமே இந்த படம் ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் சரியான வியாபாரம் இல்லாததால் நிலுவையில் இருக்கிறது.
இப்போது பாலாவின் வணங்கான் படத்தை தான் இதுவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. வணங்கான் படத்தை வைத்து தான் மற்ற ஆறு படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது. அருண் விஜய் இந்த படத்தை பெரிதும் நம்பி உள்ளார். எப்படியும் ஹிட் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தான் அடுத்தடுத்த படங்களை வியாபாரம் செய்ய காத்திருக்கிறாராம்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…