Categories: சினிமா

இளையராஜாவ நான் நல்லாப் பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன்… ஆனா சண்டை.. இப்போ அவன்தான் பாத்துக்குறான் – மிஷ்கின் எமோஷனல்!

Spread the love

சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை  விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

#image_title

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. அதன் பின்னர் திறமையான இயக்குனர்கள் இளையராஜாவை தேடி செல்லவில்லை. ஆனால் மறுபடியும் அந்த ட்ரண்ட்டை  மீண்டும் தொடங்கியவர் இயக்குனர் மிஷ்கின்தான்.

அவரதான் கடந்த 10 ஆண்டுகளாக இளையராஜாவை தன்னுடைய படங்களிலும் பேட்டிகளிலும் கொண்டாடினார். அவரின் தனித்தன்மையை ஏறும் மேடைகளில் எல்லாம் இளையராஜா புகழ் பாடினார். ஆனால் அவர்கள் இருவருக்குமே சண்டை வந்து பிரிந்தனர். இப்போது மிஷ்கின் படங்களில் இளையராஜா பணியாற்றுவதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவர் இதுபற்றி பேசியுள்ளார். அதில் “நான் இளையராஜாவை நல்லாப் பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா சண்டை போட்டு வெளியே வந்துட்டேன். இப்போ தியாகராஜன் குமாரராஜா அவரை நல்லா பாத்துக்குறான். அதுக்காக நான் அவனுக்கு நன்றி சொன்னேன்” எனப் பேசியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ படத்துக்கு இளையராஜா அற்புதமான பாடல்களைக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

4 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

4 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

5 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago