இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த பழம்பெரும் நடிகையாக இருந்தவர் தான் நடிகை மனோரமா. தமிழ் திரையுலகால் தமிழ் திரைப்பட ரசிகர்களால் நடிகை மனோரமா அவர்கள் ஆட்சி என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரின் உண்மையான பெயர் கோபி சாந்தா.
இவர் 12 வயதில் நடிப்பு தொழிலில் இறங்கினார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜனாகிய ஒரு தான் இவருக்கு மனோரமா என்று பெயர் வைத்தனர். இவர் ஆரம்பத்தில் வைரம் நாடக சபா நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். தமிழகத்தின் ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் மனோரமா தன்னை எந்த அரசியல் கட்சியுடனும் இணைத்துக் கொள்ளவில்லை. 50 களின் இறுதியில் தொடங்கிய அவரின் திரைவாழ்க்கை 2010 கள் வரை தொடர்ந்தது. கடைசியாக அவர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மனோரமா இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நடிப்பை ஏனோ தானோவென்று எடுத்துக் கொள்ள மாட்டாராம். மிகுந்த அர்ப்பணிப்போடு அனுகுவாராம். இவருடைய இடத்தை நிரப்ப இதுவரை எந்த நடிகையும் வந்ததாக இல்லை. அப்படி புகழ்பெற்ற ஆச்சி மனோரமாவின் தனிப்பட்டவாழ்க்கை சற்று கொடுமையானது தான். காரணம் சிறுவயதிலேயே கணவரை இழந்து தனது தாயுடன் கைக்குழந்தையோடு வசித்து வந்தார். அவர் பெயர் பூபதி. அப்போது எம்ஜிஆரின் நண்பராக இருந்த எழுத்தாளர் ஒருவரின் கொழுந்தியாளை காதலித்துள்ளார்.
இந்த விஷயத்தை பற்றி கேள்விப்பட்ட எம்ஜிஆர் ஆச்சி மனோரமாவை கூப்பிட்டு கண்டித்துள்ளார். உன் மகனை ஒழுங்காக இருக்கச்சொல். விருப்பமில்லாத இடத்தில காதலிப்பது தவறு. அவர்களை கல்யாணம் பண்ண சொல்லி என்னால் கட்டாயப்படுத்த முடியாது. எனவே வேறு இடத்தில திருமணம் செய்து வை என்கிறார். ஆனால் மகனோ தற்கொலைக்கு முயன்று மனோரமாவின் மனதை சீர்குலைக்கிறார். அவரின் சொந்தத்திலேயே மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் மனோரமா.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…