இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்தியுள்ளார். இதற்கு இந்திய இளம் ரசிகர்கள் எல்லோரும் இளையராஜா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை அவரின் பிறந்தநாளில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசோ ஒரு படி மேலே சென்று இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு அளிக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அரசியல் தலைவர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் அவரை சந்தித்து வாழ்த்தினர். அப்படி சந்தித்த நடிகர் முத்துக்காளை இளையராஜாவின் பாடலால் தான் அடிவாங்கிய சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒரு மளிகைக்கடையில் வேலை பார்த்தேன். அப்போது இளையராஜா ஐயாவின் ‘அன்னக்கிளி’ ரெக்கார்ட் போட்டால் நான் அப்படியே அதைக் கேட்டுக்கொண்டே வேலையை மறந்துவிடுவேன். அதனால் பலமுறை கடை முதலாளியிடம் அடி வாங்கியுள்ளேன்” எனக் கூறியுள்ளார். முத்துக்காளை 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…