கானா பாடல்கள் மட்டுமல்லாமல் மெலடி பாடல்களிலும் தனித்தன்மையை காட்டி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தான் இசையமைப்பாளர் தேவா. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா தற்போதும் தன்னுடைய குரலால் அடுத்தடுத்த இசையமைப்பாளர்கள் இசையில் பாடி வருகின்றார். 90 காலகட்டத்தில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இருந்த தேவா தன்னுடைய இசையால் மட்டுமல்லாமல் குரலாலும் ரசிகர்களை கட்டி போட்டவர். கானா பாடல்கள் தான் இவருடைய ஸ்பெஷல். விஜய், அஜித் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்துள்ளார். மாட்டுக்கார மன்னாத திரைப்படம் மூலமாக கடந்த 1986 ஆம் ஆண்டு தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்த படங்களை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள தேவா 400-க்கு மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த குரலில் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தன்னுடைய இசையில் ஏராளமான கானா பாடல்களை இவர் பாடியுள்ளார். விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி, சலோமியா, ஜித்து கில்லாடி என பல பாடல்கள் இவருடைய குரலில் ரசிகர்களை கவர்ந்தன. தற்போது மற்ற இசையமைப்பாளர்களை இசையில் பல பாடல்களை பாடி வருகின்றார்.
சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தி பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். வாலி மற்றும் முகவரி படங்களில் இசை அமைத்ததற்காக இவருக்கு பிலிம் பேர் விருதுகள் வழங்கப்பட்டது. தற்போதும் பல படங்களுக்கு பாடல் பாடி கொண்டிருக்கும் இசை அமைப்பாளர் தேவா சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய பாடல்களுக்கு நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன். காபி ரைட்ஸ் மூலம் தனக்கு பணம் கிடைக்கும். ஆனால் புகழ் கிடைக்காது. தன்னுடைய பாடல்களை தற்போது வரை சமீபத்திய படங்களில் பயன்படுத்துகின்றனர்.
இதன் மூலம் தான் அடுத்தடுத்த ரசிகர்களுடன் இணைந்துள்ளேன். 2கே கிட்ஸ் வரைக்கும் தன்னை தெரிகிறது. பணத்தை விட தனக்கு இதுதான் மிகவும் முக்கியம். இளம் தலைமுறை வரை தன்னுடைய பாடல்களை ரசிப்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது என்று தேவா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்காக ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தேவாவின் இந்த பேச்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…