இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜ. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இளையராஜாவின் பாடல்கள் பலருக்கு அருமருந்தாக இருந்திருக்கிறது. அப்படி ஒரு நெஞ்சை வருடும் வகையில் இவரது இசை இருக்கும். இளையராஜாவின் இசையை கேட்டு மயங்காதவர்கள் உண்டோ என்பது போல அனைவரும் இவரது இசைக்கு அடிமை தான்.
அதேபோல் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் தான் தேவா. கானா இசையை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேலாக பல வெற்றிப் பாடல்களை உருவாக்கி இருக்கிறார். இவரது கானா பாடல்களுக்கு என்றே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது தேவா இளையராஜாவால் மன உளைச்சலில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் சமீபத்திய காலங்களில் தேவா ஒவ்வொரு ஊர்களிலும் தனது இசைக்கச்சேரி நடத்தி வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் தற்போது இளையராஜாவும் ஒவ்வொரு ஊரிலும் இசை கச்சேரி செய்ய ஆரம்பித்து ஒரு சில இடங்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார்.
இப்படியிருக்க தேவா எங்கெல்லாம் இசைக்கச்சேரி அறிவிக்கிறாரோ அதே இடத்தில் ஒரு வார வித்தியாசத்தில் இளையராஜாவின் இசை கச்சேரி என்று அறிவித்து விடுகிறார்களாம். இதனால் தேவாவுடைய இசை கச்சேரிக்கு டிக்கெட் விற்பனை ஆவது இல்லை. சில ஈவண்ட் மேனேஜ்மென்ட் உங்களது இசைக்கச்சேரியை ஆறு மாதம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று தேவாவிடம் கூறிவிட்டார்களாம். இது எதேச்சையாக நடக்கிறதா அல்லது திட்டமிட்டு இப்படி நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் மொத்தத்தில் இளையராஜாவால் மன உளைச்சலில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…