தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனக்கிருக்கும் கெட்ட பழக்கம் ஒன்றைப் பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணி உடனான நட்பு குறித்து பேசிய அவர் “நானும் மணியும் ரூம் மேட்ஸ். அவரை எங்கள் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்கவைக்க நான் எங்கள் இயக்குனரிடம் படாத பாடு பட்டேன். அவர் முதலில் அந்த வேடத்துக்குக் கவுண்டமணியை ஒத்துக்கொள்ளவே இல்லை.
அப்புறம் ஒரு நாள் இரவு 12 மணிக்குதான் ஒருவழியாக ஒத்துக்கொண்டார். அதைப் போய் மணியிடம் சொன்னபோது அவர் எமோஷனல் ஆகிவிட்டார். அதன் பின்னர் என் தொடக்கக் கால படங்களில் அவர் நடித்தார். ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர் சொக்கத்தங்கம் படத்தில் அவர் நடித்தார்.
எனக்கு இருக்கும் கெட்டப்பழக்கம் என்னவென்றால் நான் ஸ்பாட்டுக்கு சென்றுதான் எழுதுவேன். அப்போதுதான் நடிகர்களுக்கு வசனத்தை சொல்வேன். ஆனால் மணி ஸ்பாட்டுக்கு வந்தால் உதவி இயக்குனர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்ப்பார், ‘உங்கள் இயக்குனர் கடைசி நேரத்தில்தான் எழுதுவார். முன்பே சீன் பேப்பர் கொடுத்தால் நாம் எதாவது டெவலப் பண்ணலாம்’ என சொல்லிக் கொண்டே இருப்பார்.” எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…