ஒரே வீடியோவுக்காக யூடியூபருக்கு 2 கோடியை அள்ளிக் கொடுத்த எலான் மஸ்க்.. யார் இந்த Mr Beast?

Spread the love

சோஷியல் மீடியாக்களில் தங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் பதிவேற்றியும், அரட்டைகளுக்கும் பயன்படுத்தி வந்த நெட்டிசன்கள் அதில் வீடியோ போட்டால் பார்வைகைளைப் பொறுத்து பணம் கிடைக்கும் என்ற முறை வந்தவுடன் ஆளாளுக்கு வீடியோக்களை எடுத்துப் பதிவேற்றம் செய்து பேஸ்புக், யூடியூப் மூலம் தனி சேனல் தொடங்கி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். இன்று இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சோஷியல் மீடியாக்களில் வருமானம் ஈட்டுபவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

தற்போது யூடியூப்பில் லட்சக்கணக்கான சேனல்கள் இருந்தாலும் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது தான் Mr Beast சேனல். சாகச விளையாட்டுக்கள் மூலம் வீடியோக்களைப் பதிவேற்றி கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று இன்று அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் Mr Beast என இணைய உலகில் அறியப்படும் இளைஞரான ஜிம்மி டொனால்ட்சன்.

#image_title

அமெரிக்காவைச் சேர்ந்த வெறும் 24 வயதே ஆன ஜிம்மி டொனால்ட்சன் தனது சேனலை கடந்த 2012-ல் ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 23.06 கோடி சந்தாதாரர்களைக் கொண்டு யூடியூப் உலகின் ராஜாவாகத் திகழ்கிறார். மிஸ்டர் பீஸ்ட், மிஸ்டர் பீஸ்ட் 2, மிஸ்டர் பீஸ்ட் கேமிங், மிஸ்டர் பீஸ்ட் ஷார்ட்ஸ், பீஸ்ட் ரியாக்ட்ஸ், பீஸ்ட் ஃபிலந்த்ரோபி ஆகிய யூடியூப் சேனல்களை நடத்தி வரும் ஜிம்மி, ஆண்டுக்கு 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்து வருகிறார். இந்திய மதிப்பில் மாதத்திற்கு சுமார் 40 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்

இவர் ஜிம்மி டோனல்ட்சன் பிரபல டைம்ஸ் இதழின் உலகின் அதிக செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் எக்ஸ் தளத்தில் முதன் முதலாகப் பதிவேற்றிய வீடியோ ஒன்று 8 நாட்களில் இதுவரை 175 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று  இமாலய சாதனை படைத்திருக்கிறது. மேலும் இதற்காக அவருக்கு கோடிக் கணக்கில் வருமானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு டாலர் vs 100,000,000 டாலர் கார் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு சுமார் $2,50,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹ 2 கோடி) வருமானம் சென்றுள்ளது.

#image_title

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் போது, “எனது முதல் எக்ஸ் வீடியோ $ 250,000 (சுமார் 2 கோடி) வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால், அது அனைவருக்கும் இது கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. எக்ஸ் தளத்தில் விளம்பரப்படுத்துவோர் எனது வீடியோவை கவனித்து அதில் விளம்பரப்படுத்த முன்வந்துள்ளனர்.

“இனி சினிமாவில் நடிக்க போவதில்லை”… கட்சியின் பெயரை அறிவித்த கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த விஜய்…

இதன் காரணமாகவே எனது வருவாய் உங்கள் வருவாயைக் காட்டிலும் அதிகமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்த ஒரு வீடியோ மூலம் 2.63 லட்சம் டாலர், அதாவது 2 கோடி ரூபாய் சம்பாதிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பணத்தை 10 பேருக்குப் பிரித்துக் கொடுப்பதாகவும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.

இவர் பதிவிட்ட முதல் வீடியோவிலேயே வரலாறு படைத்து எலான் மாஸ்க்-ன் புருவத்தை உயர்த்தியுள்ளார் Mr Beast.

 

admin

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

7 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

7 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

7 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

7 மணத்தியாலங்கள் ago