#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடிகை இந்திரஜா நடித்து கலக்கினார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
நடிகை இந்திரஜா டாக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் திருமண அழைப்பிதழ்களும் முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் போன்றோருக்கு கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இன்று நடிகை இந்திரஜாவிற்கு முறை மாமன் கார்த்திக்கிற்கும் நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால் , அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். தற்பொழுது நடிகை இந்திராஜாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சிறப்பு லட்சுமி பூஜை செய்தால் கோடி கோடியாகப் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி, ஏழைக் குடும்பத்து இளம்பெண்களைப் பாலியல்…
தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…