ஆன்ட்ராய்டு போன்களின் வரிசையில் அரசனான சாம்சங் கேலக்ஸி S24 Ultra..

Spread the love

இதுவரை வெளியான ஆன்ட்ராய்டு போன்களில் அதிகபட்ச சிறப்பம்சங்களைக் கொண்டாதாகவும், வடிவமைப்பு மற்றும் விலையில் உச்சமுமாக விளங்கிய சாம்சங் கேலக்ஸி S23 Ultra ஸ்மார்ட் போனுக்கு சவால் விடும் விதமாக அதன் அடுத்த அப்டேட்டை வெளியிட்டு அசர வைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.

ஆன்ட்ராய்டு செயலியில் சாம்சங் ஸ்மார்ட் போன் வரலாற்றில் S23 வகை போன்களே இதுவரை அரசனாக விளங்கியது.  தற்போது இதன் அப்டேட்டாக வெளிவந்துள்ள ஸ்மார்ட் போன் தான் Samsung S24 Ultra. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போனில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?

Galaxy S24 அல்ட்ராவின் வடிவமைப்பு S23-ஐ ஒப்பிடும் போது புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது.   S24 அல்ட்ரா குறுகிய பெசல்களுடன் பிளாட் டிஸ்ப்ளேவுடன் வருவதால், சாதாரணமாக இருக்கும் கார்னர் வளைவுகள் இதில் இல்லை. மேலும் சேஸ் அலுமினியத்திற்கு பதிலாக டைட்டானியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட பாதுகாப்பைக் கொடுக்கிறது. மற்றபடி அனைத்தும்  Galaxy S23 Ultra உடன் ஒத்துப் போகிறது. Galaxy S24 Ultra ஆனது S23 Ultra உடன் ஒப்பிடும்போது 8.6mm மெல்லியதாகவும் 1g இலகுவாகவும் உள்ளது. திரை புதிய கார்னிங் கொரில்லா ஆர்மரால் பாதுகாக்கப்படுகிறது.

#image_title

2 கோடியை அள்ளிக் கொடுத்த எலான் மாஸ்க்.. ஒரே வீடியோவில் X தளத்தையே அதிர வைத்த Mr Beast

Galaxy S24 Ultra இன் கேமரா அமைப்பில் சில புதிய முன்னேற்றங்கள் உள்ளன. Galaxy S24 Ultra ஆனது 200 MP முதன்மை கேமராவையும், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 MP டெலிஃபோட்டோ கேமராவையும், 12 MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிக்களுக்கு, சாம்சங் 12 MP முன் கேமராவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

#image_title

இதுமட்டுமல்லாது AI தொழில்நுட்பத்தால் இது மேம்படுத்தப்பட்டுள்ளது. சார்ஜ் திறனைப் பொறுத்தவரை Samsung Galaxy S24 Ultra ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் -ல் 5,000mAh பேட்டரியில் இயங்குகிறது. செயல்திறனைப் பொறுத்தவரை மென்பொருள் பக்கத்தில், சாம்சங் 7 வருட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை அறிவித்துள்ளது, மேலும் கூகிள் பிக்சல் 8 தொடருடன் கூடிய முதன்மை ஸ்மார்ட்போன் சலுகைகளை உருவாக்குகிறது.

Samsung Galaxy S24 Ultra ஆனது 12GB+256GB வகைக்கு ரூ.1,29,999 , 12GB+512GB வகைக்கு ரூ.1,39,999 மற்றும் 12GB+1TB வகைக்கு ரூ.1,59,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது புக்கிங் நடைபெறுகிறது.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago