திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் புகார்களை முன்வைத்துள்ளனர். பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும், ஒருமையில் திட்டி தவறாக நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பணம் மற்றும் சொத்துக்களை எழுதி வாங்கி மிரட்டுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகிகள் ஆரணியில் உள்ள சத்யாவின் அலுவலகத்தைப் பூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது, அலுவலகப் பேனரில் இருந்த சத்யாவின் புகைப்படத்திற்குக் கருப்பு மை பூசியும், ‘ஆரணியை விட்டு வெளியேறு’ என முழக்கமிட்டும் பெண் நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு வீதியில் இறங்கிப் போராடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்துப் பேசிய வடக்கு நகரப் பொறுப்பாளர் ராதா, சத்யா தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதுபற்றிப் பொதுச்செயலாளர் ஆனந்த்திடம் புகார் அளித்ததால் பதவியிலிருந்து விலகச் சொல்லித் தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தவறாகப் பரப்பி குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்தபோது, இதனைக் கட்சி ரீதியாக அணுகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…