சென்னை சூளமேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பிரமிளா. இவருக்கு வசந்தகுமார்(30), ராஜ பிரபா(25) மற்றும் முகில் (19) ஆகிய மூன்று மகன்கள் உள்ளார்கள். கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரன் பிரிந்து சென்றதால் பிரமிளா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய இளைய மகன் முகில் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால் வெட்டிக் கொன்று விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த போலீஸ் முகில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். பிறகு பிரமிளாவிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய மூத்த மகன் வசந்தகுமார் தான் முகிலை வெட்டிக் கொன்றார் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து தலைமறைவாக இருந்த வசந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர் கண்ணன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த முகில் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னுடைய தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் தாயையும் வெட்டிக் கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். முகிலின் செயல்பாடுகளால் வசந்தகுமாருக்கு திருமண வரன் கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தகுமார் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம் போல முகில் மதுபோதையில் வந்து தன்னுடைய தாயை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தூங்கி விட்டாராம். இது குறித்து வசந்தகுமாரிடம் பிரமிளா கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தகுமார் தன்னுடைய நண்பரோடு வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த தம்பி முகிலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அடுத்த மாதம் மகன் வசந்தகுமாருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் கொலை வழக்கில் அவர் சிறைக்கு சென்று விட்டால் திருமணம் நின்று விடும் என்று கருதி பிரமிளா மூத்த மகன் செய்த கொலையை மறைத்து தானே மகனை வெட்டிக் கொன்றதாக கொலை பழியை ஏற்று போலீசில் சரண் அடைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…