யாரும் தேவையில்லாம பேசாதீங்க… உண்மை இதுதான்… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முகமது சிராஜ்..!

Spread the love

இந்திய அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகளால் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளார்.
சமீபத்தில் ஜனாய் போஸ்லே உடன் காதலில் இருப்பதாக பதவிகள் பரவி வந்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 9ஆம் தேதி ரக்‌ஷா பந்தனில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஜனாய் போஸ்லே பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சிராஜ் கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பினர். இந்நிலையில் இருவரும் அண்ணன்-தங்கை என இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். மேலும் மக்களின் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்தில் ஜனாய் போஸ்லே,  சிராஜின் கையில் ராக்கி கட்டினார். இந்த மகிழ்ச்சியான வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஜனாய், இதைவிட சிறந்த சகோதரனை நான் எதிர்பார்க்கவில்லை என்று பதிவிட்டார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வந்த நிலையில்,”நாங்கள் அண்ணி என்று நினைத்தோம்….ஆனால் அக்கா ஆக்கி விட்டீர்களே” என்று செம்மையாக கலாய்த்து வருகின்றனர். சிராஜுக்கு காதல் சர்ச்சையில் சிக்குவது இதில் முதல் முறை அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் 13 போட்டியாளரான, மஹிரா ஷர்மா, ஊடகங்கள் முன்னால் வந்தாலும் சரி, ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் சரி, சிராஜ் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.அப்பொழுது அவர் ஒரு நேர்காணலில், “நான் யாரையும் காதலிக்கவில்லை” என தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து வதந்திகளால் விரக்தியடைந்த சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “தயவுசெய்து இத்தகைய கேள்விகளை…கேட்பதை நிறுத்துங்கள்…இவை அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதாரம் இல்லாதவை” என்று விளக்கம் அளித்தார். இந்த ராக்கி வீடியோவுக்கு பிறகு அவர் மீதான அனைத்து வதந்திகளும் முடிவுக்கு வந்தன.இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளிலும் ஓய்வு இன்றி சிராஜ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Srimathi

Recent Posts

குட் நியூஸ்..! இனி ‘ஆதார்’ இல்லாமல் இது நடக்காது… மேட்ரிமோனி இணையதளங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு… வெளியிட்ட தமிழக அரசு…!!

ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னடா இது… விருந்தாளிக்கு குடுத்திருந்தா என் மானமே போயிருக்கும்… பிளிப்கார்ட் அனுப்பிய சிலந்தி வலை குலாப் ஜாமுன்… நிச்சயதார்த்த நாளில் மனமுடைந்த இளைஞர்…!

பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய உணவுப் பொருட்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயதார்த்தம்…

3 மணத்தியாலங்கள் ago

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்”!… வன்முறைக்கு பின் பீகார் அரசின் அதிரடி எச்சரிக்கை… மேடையில் அமைச்சர் விடுத்த பகீர் வார்னிங்…!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைத் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… இரவில் பசிக்கு ஆர்டர் செய்த பனீர் பிரியாணி… உணவை தட்டில் கொட்டியதும் கதறிய பெண்… ஸொமேட்டோ உணவகத்தின் பேரதிர்ச்சி சம்பவம்…!

ஒரு இந்து பிராமணப் பெண்ணான அவள், அன்றைய இரவு கடுமையான பசியின் காரணத்தால் ஸொமேட்டோ செயலியைத் திறந்து உணவருந்த முடிவு…

4 மணத்தியாலங்கள் ago

ஏன் இப்படி ஒரு முடிவு..! முதல் மாடியிலிருந்து கீழே குதித்த பெண்… நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்… டேராடூனில் நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

டேராடூன் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. நியூ கேன்ட் சாலை, விஜய் காலனியைச்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ யாராவது காப்பாத்துங்க… மாணவிக்கு நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… டெல்லியை உலுக்கிய பகீர் சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago