பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் தமிழக அரசு… யாரெல்லாம் பயன்படலாம்?.. இதோ முழு விவரம்..!

Spread the love

தமிழ்நாட்டு மக்களுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. அதில் ஒன்று பெண்களுக்கு இலவசமாக தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்துறையின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், வயதான பெண்களும் மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் மகளிர்குழுவில் இருக்கும் பெண்களுக்கு தலா 1,00,000 வரை குறைந்த வட்டியில் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசு நிதி உதவி தனிநபர் கடன் எனும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இலவச மின் மோட்டார் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இத்திட்டத்திற்கு 20 வயது முதல் 40 வயது வரை இருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் ஆகியோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தையல் கலைகள் அறிந்திருக்க வேண்டும். முன்பே இலவச தையல் இயந்திரம் பெற்றிருக்கக் கூடாது.

இலவச தையல் இயந்திரத்தை விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்தையோ அல்லது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், வயது சான்றிதழ், விண்ணப்பத்தாரின் புகைப்படம், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

Divyamayakannan

Recent Posts

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

3 minutes ago

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

17 minutes ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

31 minutes ago

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

44 minutes ago

“தப்பு பண்ணிட்டேன்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…” ஐ.ஐ.டி பாம்பே மாணவர் தற்கொலை… மகனை இழந்த தந்தையின் கண்ணீர்…. பெரும் சோகம்…!!

மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…

55 minutes ago

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

1 மணத்தியாலம் ago