இந்திய அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகளால் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளார்.
சமீபத்தில் ஜனாய் போஸ்லே உடன் காதலில் இருப்பதாக பதவிகள் பரவி வந்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 9ஆம் தேதி ரக்ஷா பந்தனில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஜனாய் போஸ்லே பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சிராஜ் கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பினர். இந்நிலையில் இருவரும் அண்ணன்-தங்கை என இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். மேலும் மக்களின் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் ஜனாய் போஸ்லே, சிராஜின் கையில் ராக்கி கட்டினார். இந்த மகிழ்ச்சியான வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஜனாய், இதைவிட சிறந்த சகோதரனை நான் எதிர்பார்க்கவில்லை என்று பதிவிட்டார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வந்த நிலையில்,”நாங்கள் அண்ணி என்று நினைத்தோம்….ஆனால் அக்கா ஆக்கி விட்டீர்களே” என்று செம்மையாக கலாய்த்து வருகின்றனர். சிராஜுக்கு காதல் சர்ச்சையில் சிக்குவது இதில் முதல் முறை அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் 13 போட்டியாளரான, மஹிரா ஷர்மா, ஊடகங்கள் முன்னால் வந்தாலும் சரி, ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் சரி, சிராஜ் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.அப்பொழுது அவர் ஒரு நேர்காணலில், “நான் யாரையும் காதலிக்கவில்லை” என தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து வதந்திகளால் விரக்தியடைந்த சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “தயவுசெய்து இத்தகைய கேள்விகளை…கேட்பதை நிறுத்துங்கள்…இவை அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதாரம் இல்லாதவை” என்று விளக்கம் அளித்தார். இந்த ராக்கி வீடியோவுக்கு பிறகு அவர் மீதான அனைத்து வதந்திகளும் முடிவுக்கு வந்தன.இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளிலும் ஓய்வு இன்றி சிராஜ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
