தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்… “அந்த ஒரு காரணத்திற்காக” கொலை பழியை ஏற்ற தாய்… கிடுக்குபிடி விசாரணையில் உண்மை அம்பலம்…!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

சென்னை சூளமேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பிரமிளா. இவருக்கு வசந்தகுமார்(30), ராஜ பிரபா(25) மற்றும் முகில் (19) ஆகிய மூன்று மகன்கள் உள்ளார்கள். கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரன் பிரிந்து சென்றதால் பிரமிளா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று  தன்னுடைய இளைய மகன் முகில் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு  செய்ததால் வெட்டிக் கொன்று விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த போலீஸ்  முகில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். பிறகு பிரமிளாவிடம் நடத்திய விசாரணையில்  தன்னுடைய மூத்த மகன் வசந்தகுமார் தான் முகிலை வெட்டிக்  கொன்றார் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து தலைமறைவாக இருந்த வசந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர் கண்ணன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த முகில் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னுடைய தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் தாயையும் வெட்டிக் கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.  முகிலின்  செயல்பாடுகளால் வசந்தகுமாருக்கு திருமண வரன் கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தகுமார் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

   

சம்பவத்தன்று இரவு வழக்கம் போல முகில் மதுபோதையில் வந்து தன்னுடைய தாயை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தூங்கி விட்டாராம். இது குறித்து வசந்தகுமாரிடம் பிரமிளா கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தகுமார் தன்னுடைய நண்பரோடு வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த தம்பி முகிலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அடுத்த மாதம் மகன் வசந்தகுமாருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் கொலை வழக்கில் அவர் சிறைக்கு சென்று விட்டால் திருமணம் நின்று விடும் என்று கருதி பிரமிளா மூத்த மகன் செய்த கொலையை மறைத்து தானே மகனை வெட்டிக் கொன்றதாக கொலை பழியை ஏற்று போலீசில் சரண் அடைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.