ஆர்டர் போட்டு ரொம்ப நேரமாச்சு… இன்னும் என்ன பண்ணுறீங்க..? ஆத்திரத்தில் வாடிக்கையாளர் செய்த காரியம்… அலறியடித்து ஓடிய ஹோட்டல் ஊழியர்கள்..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் சம்பவத்தன்று வருடைய நண்பர் நிஜா முதீனுடன் அந்த பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். இருவரும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட உணவுக்காக காத்திருந்தார்கள். ஆனால் வெகு நேரம் ஆகியும் அங்குள்ள பணியாளர்கள் உணவு தர தாமதித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அப்துல் ஹக்கீம் வேலை முடிந்து நின்று கொண்டிருந்த உணவக ஊழியர் மீது காரை வைத்து ஏற்ற முயன்றுள்ளார். இதில் அனைவரும் ஓடி தப்பித்ததில் ஒருவர் மட்டும் காயமடைந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அப்துல் ஹக்கீம் மற்றும் அவருடைய நண்பர் நிஜாமுதீன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள். உணவு வர தாமதமானதால் ஊழியர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.