ஈட்டி எறிதல் பயிற்சியில் குறுக்கே வந்த மாணவன் தலையில் பாய்ந்த ஈட்டி.. மூளைச்சாவு அடைந்த துயரம்… சோக சம்பவம்..!

By Divyamayakannan on ஆவணி 10, 2025

Spread the love

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேவுள்ள கோம்பையை சேர்ந்தவர் சந்திரன். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கேரளாவில் ஏலத்தோட்டத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் சாய்பிரசாத் [14]. இவன் ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலையில்பள்ளி விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். நாள்தோறும் பள்ளி முடிந்தவுடன் சாய்பிரசாத் தனது நண்பர்களுடன் மாலை நேரத்தில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கமாக உள்ளது.

நேற்று முன்தினம் மாலை சாய்பிரசாத் நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கூடலூரை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் தபேஸ்[19]. இவர் சென்னையில் உள்ள விளையாட்டு கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கிறாராம். விடுமுறைக்கு ஊருக்கு வந்த தபேஷ் ஈட்டி எறிதல் பயிற்சிக்காக ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளி மைதானத்திற்கு வந்துள்ளார். அந்த மைதானத்தில் தான் சாய்பிரசாதும் தன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

   

தபேஸ் ஈட்டி பயிற்சி போது எரிந்த ஈட்டி தவறுதலாக அங்கு விளையாடிக்கொண்டிருந்த சாய் பிரசாத்தின் தலையில் பாய்ந்து ரத்தம் கொட்டியுள்ளது. வலியால் அலறி துடித்த அவனை அங்கிருந்து ஆசிரியர்களும் நண்பர்களும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதலுதவி அளித்து பின்னர் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளர். 2நாட்களாக தீவிரச் சிகிச்சை கொடுத்து போதும். இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார். இதைக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.