“என் பொண்டாட்டி குழந்தைகளை விட.. நீ தான் முக்கியம்”… 13 ஆண்டு கால காதல் வாழ்க்கை… ஒரே ஒரு பெண்ணால் சுடுகாடான கோரம்… அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கள்ளக்காதல் மோகத்தால் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்த வாரங்கல் இளைஞரின் செயல் தெலுங்கானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது. வாரங்கல்லைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ஸ்ரவந்தி தம்பதியினர் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணம் முடித்தவர்கள். இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரவீனுக்கு மகேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதுடன், தனது முதல் திருமணத்தை மறைத்து பிரவீன் மகேஸ்வரியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் ஸ்ரவந்திக்குத் தெரியவரவே, குடும்பத்தில் பெரும் புயல் வீசியது. தனது கணவரின் துரோகத்தைக் கண்டித்த ஸ்ரவந்தி மீது ஆத்திரமடைந்த பிரவீன், “மனைவி பிள்ளைகளை விட நீதான் எனக்கு முக்கியம்” என மகேஸ்வரியிடம் கூறிவிட்டு, ஸ்ரவந்தியை அடித்துத் துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கணவரின் இரண்டாவது திருமணம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஸ்ரவந்தி, தனது தாய் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்தார். இருப்பினும், உறவினர்களின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதிக்குக் குடிபெயர்ந்து மீண்டும் இணைந்து வாழத் தொடங்கினர்.

ஆனால், திருந்தாத பிரவீன் தொடர்ந்து தனது இரண்டாவது மனைவி மகேஸ்வரியுடன் தொடர்பில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரவந்தி, வாழ்நாள் முழுவதும் போராடித் தோற்றுப்போன விரக்தியில் ஒரு விபரீத முடிவை எடுத்தார். நேற்று முன்தினம், தனது இரண்டு மகன்களையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய வைத்து, தானும் அதே கோலத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்டார். ஒரே நேரத்தில் தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், ஸ்ரவந்தியின் குடும்பத்தினர் கடும் ஆத்திரமடைந்தனர். தனது மகளின் வாழ்வைச் சிதைத்த பிரவீனின் வீட்டை உறவினர்கள் அடித்து நொறுக்கித் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஒரு ஆணின் முறையற்ற உறவும், பொறுப்பற்ற தனமும் ஒரு அழகிய குடும்பத்தையே சுடுகாடாக்கியுள்ள இந்தச் சம்பவம், கள்ளக்காதல் எனும் கொடிய அரக்கன் சமூகத்தில் ஏற்படுத்தும் பேரழிவிற்கு மற்றுமொரு சாட்சியாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

பாஜக – தி.மு.க இடையே ரகசிய உறவு…? தவெக போட்ட அதிர்ச்சி குண்டு… உண்மையை உடைத்த தமிழிசை..!!

பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…

3 minutes ago

கோவையில் அதிர்ச்சி..! பிணத்தை தோண்டி எடுத்து 3 1/2 பவுன் தங்கம் திருட்டு… பக்கத்து வீட்டு இளைஞர்கள் துணிகரம்.. மயான ஊழியரின் பகீர் வாக்குமூலம்..!!

கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…

9 minutes ago

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

14 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

22 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

31 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

44 minutes ago