“10 ஏக்கர் நிலம்… கோடிகளில் சொத்து”… உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த சொத்து பட்டியல்… இத்தனை கோடிகளா?… திடுக்கிடும் உண்மை…!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனுடன் அவர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு மொத்தம் சுமார் ரூ.20.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.12.92 கோடி என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.7.72 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனங்களைப் பொறுத்தவரை, அவரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள டிஃபெண்டர் கார் மற்றும் ரூ.23 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் ஆகிய இரண்டு வாகனங்கள் உள்ளன.

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் பெயரில் ரூ.13.25 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அசையா சொத்துகள் ஏதுமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ரூ.1.87 கோடி மதிப்பிலான பழைய தங்க நகைகள் கிருத்திகா வசம் உள்ளன. அதே சமயம், உதயநிதி ஸ்டாலின் பெயரில் தங்கம் அல்லது வெள்ளி நகைகள் எதுவும் இல்லை என வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் கிருத்திகாவின் அசையும் சொத்துகள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.

அசையா சொத்துகளின் விவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10.5 ஏக்கர் வேளாண் நிலம், வேளச்சேரியில் நிலம் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ஆகியவை உதயநிதிக்குச் சொந்தமாக உள்ளன. மேலும், இந்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். சனாதனம் தொடர்பான கருத்துக்கள் உள்ளிட்ட விவகாரங்களில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 10 வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

Nanthini

Recent Posts

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

20 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

39 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago