எமனாக வந்த டிராக்டர்.. “பள்ளிச் சீருடையுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த 8-ம் வகுப்பு மாணவன்”… சீர்காழியில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் விபத்து..!!

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே நிகழ்ந்த இந்த கோர விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தென்னாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீகாந்த், தனது நண்பன் பிரசன்னாவுடன் பள்ளிக்குச் சைக்கிளில் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான். காயமடைந்த பிரசன்னா தற்போது சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தகவலறிந்த திருவெண்காடு போலீசார், உயிரிழந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற டிராக்டர் ஓட்டுநர் குருமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்பகுதியில் குடிநீர் டேங்கர் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாகப் பள்ளி நேரங்களில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், பள்ளிப் பகுதிகளில் உடனடியாக வேகத்தடைகளை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago